என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தமிழக பட்ஜெட்: 1000 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்
Byமாலை மலர்16 March 2017 3:23 PM IST (Updated: 16 March 2017 3:23 PM IST)
ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2017 - 2018ஆம் ஆண்டில் 1,000 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் அகலப்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட் உரையின்போது அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
115 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளும், 107 கிலோ மீட்டர் நீளமுள்ள மாவட்ட முக்கியச் சாலைகளும் 160 கோடி ரூபாய் செலவில், வரும் 2017-2018ஆம் ஆண்டில் அகலப்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2017-2018ஆம் ஆண்டில் 1,000 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணிகளையும் 3,000 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளையும், 200 பாலங்கள், சிறு பாலங்கள் கட்டுவதற்கான பணிகளையும் அரசு மேற்கொள்ளும் இத்திட்டத்திற்காக 2017-2018ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் அடிப்படையில், பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கியச் சாலைகளை மேம்படுத்தி பராமரிக்கும் பணிகள் 1,774.31 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2017-2018ஆம் ஆண்டில் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை விருதுநகர் கோட்டத்திற்குள் விரிவுப்படுத்தப்படும்.

Next Story
×