என் மலர்
செய்திகள்

சங்கராபுரம் அருகே பஸ் நிறுத்தத்தில் பெண் மாயம்
சங்கராபுரம் அருகே பஸ் நிறுத்தத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் திடீரென மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடி வருகிறார்கள்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகேயுள்ள நூரோலை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி சிவசக்தி (வயது 34). உடல்நலம் பாதிக்கப்பட்ட சிவசக்தியை பெங்களூருக்கு அழைத்துச் செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்துக்கு செல்லதுரை அழைத்து வந்தார்.
அப்போது சிவசக்தி எனக்கு ஸ்வீட் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். செல்லதுரை ஸ்வீட் வாங்கிக் கொண்டு திரும்பி வந்தபோது சிவசக்தியை காணவில்லை. அந்த பகுதியில் தேடினார். பலன் இல்லை.
எனவே வாணாபுரம் பகண்டைகூட்ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிவசக்தியை தேடிவருகிறார்கள்.
Next Story