என் மலர்

    செய்திகள்

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை
    X

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்று இரவு 9 மணிக்கு விடிய விடிய கனமழை பெய்தது. மழைவெள்ளத்தில் கார் இழுத்து செல்லப்பட்டது.

    ஊட்டி:

    பருவமழை பொய்த் ததால் கோவை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவியது. இதனால் நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன.

    குறிப்பாக வனப்பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகள் ஊருக்கும் புகுந்து வந்தன. மேலும் குடிநீருக்கும் கடும் தட்டுப் பாடு ஏற்பட்டது. விவசாய நிலங்களில் பயிரிட்ட விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர்.

    மேலும் கோடை வெயிலின் தாக்கமும் இருந்து வந்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மழையை எதிர்பார்த்து இருந்தனர்.

    இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் பரவலாக நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. கோவை நகரிலும் இரவில் மழை பெய்தது.

    மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம் பாளையம், ஆனைக்கட்டி, மாங்கரை, சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், கணுவாய், சோமையனூர், சோமையன்பாளையம், வடமதுரை, துடியலூர், பெரிய நாயக்கன் பாளையம், பூச்சியூர், இடிகரை, வெள்ளக்கிணறு , பாப்ப நாயக்கன் பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் மழை வெள்ளம் சாலைகளில் பெருக் கெடுத்து ஓடியது. திடீரென மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சோமையன்பாளையம் பகுதியில் பெய்த மழையால் தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக சென்றது. அப்பகுதியில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு கார், சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.

    பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சூறை காற்றுடன் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் வேரோடு முறிந்து விழுந்தது.

    தெற்குபாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சின்ன தடாகம், பெரிய தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த மழையால் செங்கல் சூளைகள் பாதிக்கப்பட்டன. மழை தண்ணீரில் செங்கல் மண் கரைந்ததால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுபற்றி கவுண்டம் பாளையம் பகுதி விவசாயிகள் கூறும் போது, ‘ நேற்று பல இடங்களில் கன மழை பெய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மழையாக பெய்துள்ளது. வாழைகள் கடுமையாக சேதமாகி உள்ளது. இதேபோல் மழை தொடர்ந்து பெய்ததால் தண்ணீர் பிரச்சினையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்’ என்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கொடநாடு, தொட்டபெட்டா, நஞ்சநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.

    கோத்தகிரி பகுதியில் மழையால் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இன்று காலையில் மின்சாரம் வந்தது.

    இதனால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கேரட், உருளைக்கிழங்கு, முட்டை கோஸ் உள்ளிட்ட பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கின. இதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    நேற்று பெய்த மழையால் காமராஜர் சாகர் அணை, மற்றும் மாதுளமந்து, டைகர் ஹில்ஸ், கோடப்பம்மந்து உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    Next Story
    ×