என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    காஞ்சீபுரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் பா.ம. க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலவிவரும் கடுமையான குடிநீர் பிரச்சினையை தீர்க்க மத்திய-மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் பா.ம. க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநில துணை பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருக்கச்சூர் கே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் பொன்.கங்காதரன், முன்னாள் எம்.எல். ஏ.வும், மாநில துணைத் தலைவருமான சக்தி கமலம்மாள் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்குமார், நிர்வாகிகள் வ.உமாபதி, செவிலிமேடு வ.செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×