என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அரியலூர்:
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, மண்எண்ணெய், பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி அரியலூரில் உள்ள 8 ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில் நிலையம் முன்பு உள்ள ரேஷன் கடையில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகரம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
செந்துறை தாலுகாவில் உள்ள 68 ரேஷன் கடைகள் முன்பும் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாம்பாளையத்தில் ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ் தலைமையிலும், செந்துறையில் ஊராட்சி செயலாளர் காளமேகம் தலைமையிலும் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த பகுதி ஊராட்சி செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
மீன்சுருட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டத்தில் உள்ள ரேஷன் கடை முன்பு வடக்கு ஒன்றிய செயலாளர் தனசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி, முன்னால் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துச்சேர்வா மடம், இளையபெருமாள் நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் உள்பட பல்வேறு ரேஷன் கடைகள் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் உள்பட 165 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடையார்பாளையம்
உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் எதிர்புறம் உள்ள ரேஷன் கடை முன்பு தி.மு.க. நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் உடையார்பாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளான கழுமங்கலம், தத்தனூர், கச்சிபெருமாள், சோழங்குறிச்சி, சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து ஈடுபட்ட தி.மு.க.வினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. மாநில இணை செயலாளர் சுபாஷ் சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 112 பேரும், தா.பழூரில் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேரும், ஆண்டிமடம், வரதராஜன்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 159 பேரும், விக்கிரமங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பேரும், வி.கைகாட்டியில் 114 பேரும், திருமானூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் கென்னடி உள்பட 320 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து தி.மு.க. வினர் அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story