என் மலர்

  செய்திகள்

  சாக்கு விற்று ரூ.8 லட்சம் மோசடி: கூட்டுறவு வங்கி முன்னாள் செயலாளர் கைது
  X

  சாக்கு விற்று ரூ.8 லட்சம் மோசடி: கூட்டுறவு வங்கி முன்னாள் செயலாளர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.7¾ லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற சங்க செயலாளரை போலீசார் கைது செய்தனர். மேலும், எழுத்தரை வலைவீசி தேடி வருகின்றனர்.
  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் செயலாளராக நன்னிலத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 59) வேலை பார்த்து, தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார்.

  இந்த சங்கத்தில் எழுத்தராக அதே பகுதியை சேர்ந்த கணேசன் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் 2015-16-ம் ஆண்டிற்கான கணக்கு வரவு-செலவுகளை அதிகாரிகள் தணிக்கை செய்துள்ளனர். அப்போது வங்கியில் சாக்குகளை விற்பனை செய்ததில் ரூ.7 லட்சத்து 85 ஆயிரத்து 850 மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து திருவாரூர் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் நடராஜன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.

  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்படி, வணிக புலனாய்வு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை, ஏட்டுகள் கார்த்திகேயன், உதயகுமார், கோகிலம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  இதில் நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கோவிந்தராஜ், எழுத்தர் கணேசன் ஆகியோர் சாக்குகளை விற்பனை செய்ததில் மோசடி செய்து இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கோவிந்தராஜை கைது செய்தனர். அவரை நன்னிலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வெங்கடேச பெருமாள் முன்னிலையில் ஆஜர்படுத்தி நன்னிலம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள எழுத்தர் கணேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
  Next Story
  ×