என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுவாஞ்சேரியில் போலீஸ் ஏட்டை தாக்கி செல்போன்-பணம் கொள்ளை
    X

    கூடுவாஞ்சேரியில் போலீஸ் ஏட்டை தாக்கி செல்போன்-பணம் கொள்ளை

    கூடுவாஞ்சேரியில் போலீஸ் ஏட்டை தாக்கி செல்போன்-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன்.

    நேற்று இரவு கூடுவாஞ்சேரி கிழப்பாக்கத்தில் தனது மோட்டார்சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது ஒரு கடையின் அருகே 2 பேர் நின்று பேசி கொண்டு இருந்தனர். ரவிச்சந்திரன் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தினர். 2 பேரும் செல்போன் மூலம் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் போலீஸ்காரர் ரவிச்சந்திரனிடம் தகராறு செய்தனர்.

    பின்னர் 5 பேரும் சேர்ந்து ரவிச்சந்திரனை கையால் தாக்கி அவரிடம் இருந்து செல்போன்- பணத்தை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து சென்று ரவிச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய 5 பேரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×