என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரத்தில் விவசாயிகள் மறியல்: 25 பேர் கைது
    X

    தாம்பரத்தில் விவசாயிகள் மறியல்: 25 பேர் கைது

    விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாம்பரத்தில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    தாம்பரம் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் நாகப்பன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நாகப்பன் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.


    Next Story
    ×