என் மலர்
செய்திகள்

கும்மிடிப்பூண்டி சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கோவிந்தன்.
இவர் நேற்று மாலை கும்மிடிப்பூண்டி சாலையில் புது கும்மிடிப்பூண்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை கோவிந்தன் தடுத்து நிறுத்தி விசாரித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் கும்மிடிப்பூண்டி சிப்-காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பொன்னேரியை சேர்ந்த கார்த்திக், இளங்கோவன், தணிகாசலம் என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.