என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்மஞ்சேரி அருகே கொள்ளையன் கைது: 26 பவுன் நகை பறிமுதல்
    X

    செம்மஞ்சேரி அருகே கொள்ளையன் கைது: 26 பவுன் நகை பறிமுதல்

    செம்மஞ்சேரி அருகே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 26 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    திருவான்மியூர்:

    துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகிநகரை சேர்ந்தவர் கிட்டா என்கிற கிருஷ்ணமூர்த்தி (33). பழைய குற்றவாளி. கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை பகுதியில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்தான். அவன் மீது துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகிநகர், கானாத்தூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த அவன் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தான். அப்போது ரோந்து சுற்றி வந்த செம்மஞ்சேரி போலீசார் அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் இருந்து 26 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×