என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் மாணவர்கள் 2 பேர் மாயம்
    X

    ராஜபாளையத்தில் மாணவர்கள் 2 பேர் மாயம்

    ராஜபாளையத்தில் 2 மாணவர்கள் திடீரென காணவில்லை. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த குருவையா மகன் ஈஸ்வரபாண்டியன் (வயது 13). இவர் ரெயில்வே பீடரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற ஈஸ்வர பாண்டியன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து சிறுவனின் தாய் முத்துலட்சுமி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவனை தேடி வருகிறார்.

    இதே பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் கனகராஜ் (13). பள்ளிக்கு சென்று வந்த இவன் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தான். இவனையும் திடீரென காணவில்லை.

    இது குறித்து அவனது தந்தை முத்து தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×