என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: நிர்மலா சீதாராமன் பேட்டி
    X

    மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: நிர்மலா சீதாராமன் பேட்டி

    தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    மாநில தேர்தல்களில் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றி மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் காலதாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சினையிலும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் ஐந்து தமிழக மீனவர்களுக்கு விதித்த தூக்கு தண்டனையில் இருந்து அவர்களை காப்பாற்றி தமிழகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி. அதே வேகத்தில்தான் தமிழக மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


    ஹைட்ரோ கார்பன் திட்டம் மாநில அரசு அனுமதியின்றி செயல்படுத்த முடியாது. இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×