என் மலர்
செய்திகள்

இலுப்பூர் அருகே சுத்தமான குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
இலுப்பூர் அருகே சுத்தமான குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இலுப்பூர்:
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டியில் ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதிக்கு சுத்தமான குடிதண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பொதுமக்கள் சுத்தமான குடிநீர் வழங்ககோரி நேற்று காலை காலிகுடங்களுடன் இலுப்பூர்–பெரியகுரும்பப்பட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த விராலிமலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா மற்றும் அதிகாரிகள் சம்பந்தபட்ட இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுத்தமான குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story