என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்திக்கடவு திட்டத்திற்காக 2-ந்தேதி உண்ணாவிரதம்: சரத்குமார் அறிவிப்பு
    X

    அத்திக்கடவு திட்டத்திற்காக 2-ந்தேதி உண்ணாவிரதம்: சரத்குமார் அறிவிப்பு

    அத்திக்கடவு திட்டத்திற்காக 2-ந்தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளர் சரத்குமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளர் சரத்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-

    தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக- இலங்கை அரசு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவை எடுக்க வேண்டும். மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.

    அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டித்து ஏப்ரல் 2-ந்தேதி அவினாசியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    Next Story
    ×