என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநின்றவூர் சென்ற டி.டி.வி.தினகரனுக்கு கருப்புக்கொடி
    X

    திருநின்றவூர் சென்ற டி.டி.வி.தினகரனுக்கு கருப்புக்கொடி

    திருநின்றவூர் காந்தி சிலை அருகே எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா சிலையை திறக்க சென்ற டிடிவி தினகரனுக்கு அ.தி.மு.கவினர் கருப்பு கொடி காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சென்னை:

    ஆவடியை அடுத்த திரு நின்றவூர் பகுதியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. சிலைகளை திறப்பதற்காக அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருநின்றவூர் சென்றார்.

    அப்போது திருநின்றவூர் காந்தி சிலை அருகில் திரண்ட அ.தி.மு.க.வினர் சிலர் ஜெயலலிதா சிலையை திறக்க தினகரனுக்கு தகுதியில்லை என்று கூறி அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘திரும்பி போ’, ‘திரும்பி போ’ என்று கருப்புக் கொடி காட்டினார்கள்.


    முன்னாள் பொருளாளர் தன்ராஜ், கழக பேச்சாளர் துரைராஜ், உறுப்பினர் தினேஷ் உள்பட 7 அ.தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டிய படி தினகரனுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியபடி நின்றதால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

    தினகரனின் கார் அந்த பகுதியை கடந்து சென்ற பிறகே பரபரப்பு நீங்கியது.
    Next Story
    ×