என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுராந்தகம் விபத்தில் மாணவர் பலி: நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
    X

    மதுராந்தகம் விபத்தில் மாணவர் பலி: நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

    மதுராந்தகத்தில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சிகாமணி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். கடந்த 2004-ம் ஆண்டு இவரது மகனான பள்ளி மாணவன் கோபிநாத் (12) அரசு பஸ்சில் சிக்கி பலியானார்.

    இந்த வழக்கு மதுராந்தகம் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பலியான கோபிநாத் குடும்பத்துக்கு விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் ரூ. 3 லட்சம் நஷ்டஈடு தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் நஷ்டஈடு தொகை வழங்கப்படவில்லை.

    இது குறித்து சிகாமணி மீண்டும் கோர்ட்டில் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிபதி பிரீத்தி, நஷ்டஈடு வழங்காததால் விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

    இதையடுத்து மதுராந்தகம் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×