என் மலர்
செய்திகள்

கடலூர்-விழுப்புரத்தில் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம்
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி கடலூர்-விழுப்புரத்தில் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
கடலூர்:
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஓ.பி.எஸ்.அணியினரின் உண்ணாவிரதம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. முன்னாள் எம்.எல்.ஏ.அய்யப்பன் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் கலைமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அருள், தமிழழகன், துரை.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் கங்கா, முன்னாள் எம்.பி.பு.தா.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
உண்ணாவிரதத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். உண்ணாவிரத பந்தலை சுற்றிலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
விழுப்புரம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள நகராட்சி பள்ளி மைதானத்தில் ஓ.பி.எஸ்.அணியினர் இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கினர் டாக்டர்.லட்சுமணன் எம்.பி.தலைமை தாங்கினார்.
விழுப்புரம் எம்.பி.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தலைமை கழக பேச்சாளர் நடிகர் ராமராஜன் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார்.

Next Story