என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் மணல் கடத்திய 3 பேர் கைது
    X

    காஞ்சீபுரத்தில் மணல் கடத்திய 3 பேர் கைது

    காஞ்சீபுரத்தில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயில் தெரு வழியாக அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கருக்கு தகவல் வந்தது. அவரது தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த மணிகண்டன், ஆதி கேசவன், பரசுராமன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×