என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
காஞ்சீபுரத்தில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த ஏரிகாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர் கூலி தொழிலாளி. இவரது மகன் சேட்டு (வயது 17). காஞ்சீ புரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.
இந்த நிலையில் மாணவன் சேட்டு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். நேற்று காலை அவனுக்கு காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து அவனை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சேட்டு இறந்தான். இதனால் பெற்றோர் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
டாக்டர்கள் தவறான சிகிச்சையால்தான் மாணவன் இறந்ததாக கூறி ஆஸ்பத்திரியில் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விஷ்ணு காஞ்சீ போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து போராட்டம் நடத்தி வர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story






