என் மலர்
செய்திகள்

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
ராமநத்தம் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி இன்று காலை வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தத்தில் கொரக்கைவாடி கிராமம் உள்ளது. இங்கு 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டப்பட்டது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
எனவே பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வயல் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தனர்.
கொரக்கைவாடியில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும், வேறு இடத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டவேண்டும் என்று கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதைகண்டித்து சங்கு ஊதும் போராட்டம், சாலைமறியல் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தினர். ஆனாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இதைத்தொடர்ந்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கொரக்கைவாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வயல்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க குடத்துடன் சென்ற பெண்கள் கையில் கருப்புக் கொடி ஏந்தி சென்றனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story