என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா உடனே வெளியேற வேண்டும்: வெள்ளையன்
    X

    உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா உடனே வெளியேற வேண்டும்: வெள்ளையன்

    உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா உடனே வெளியேற வேண்டும் என்று மாநில தலைவர் வெள்ளையன் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
    பண்ருட்டி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பண்ருட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 34-வது வணிகர் தின விழா வருகிற மே மாதம் 5-ந்தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்தியாவில் அன்னிய ஆதிக்கத்தில் சில்லரை வணிகம் அழிந்து வருகிறது. இதற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். மத்தியில் ஆட்சிக்கு வருபவர்கள் அன்னிய ஆதிக்கத்திற்கு துணை போகிறார்கள். இந்த ஆட்சியாளர்களையும் வழிக்கு கொண்டு வர முடியும் என்கிற நம்பிக்கை ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    உலக வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கே வைக்கப்பட்ட தீப்பந்தமாகும். இதை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும். வெளிநாட்டு குளிர்பான ஆலைக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.
    Next Story
    ×