என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் மணல் திருடிய 5 பேர் கைது
காஞ்சீபுரத்தில் மணல் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பாலாற்று படுகையில் மணல் திருட்டு நடைபெறுவதாக சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் புத்தேரி சந்திப்பு, வெள்ள குளம் தெரு, சாத்தான்குட்டை தெரு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய சாலபோகம் பகுதியைச் சேர்ந்த குப்பன், கங்காதரன், செல்வராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல பாலு செட்டிசத்திரம் போலீசார் முசரவாக்கம், திருப்புட்குழி சந்திப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய முசரவாக்கம் காலணியைச் சேர்ந்த வெங்கடேசன், தங்க துரை ஆகியோரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






