என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் அரிசி கடை-குடோனில் வருமானவரித்துறை சோதனை
    X

    காஞ்சீபுரத்தில் அரிசி கடை-குடோனில் வருமானவரித்துறை சோதனை

    காஞ்சீபுரத்தில் அரிசி கடை மற்றும் குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ரெயில்வே ரோட்டில் தனியாருக்கு சொந்தமான அரிசி கடையும் குடோனும் உள்ளது. கடையின் உரிமையாளர் ஆரணி, ஆற்காடு போன்ற பகுதிகளில் இருந்து அரிசி மொத்தமாக கொள்முதல் செய்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்று வருகிறார்.

    கடந்த நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நிலையில் பணத்தட்டுப்பாடு அதிகரித்து பணப்புழக்கம் குறைந்தது. இந்நிலையில் அரிசி கடைகாரர் அதிக அளிவிலும் தொடர்ச்சியாகவும் கொள்முதல் செய்ததாக கூறப்படும் நிலையில் இக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மண்டல அதிகாரி மாலா லோகநாதன், காஞ்சீபுரம் மண்டல அதிகாரி சிவக்குமார் தலைமையில் நேற்று மதியம் முதல் 5 மணிநேரம் தொடர் சோதனை நடத்தினர்.

    சோதனை குறித்து கருத்து தெரிவிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். ஆனால் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவற்றினை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
    Next Story
    ×