என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் டீயில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
    X

    காரைக்குடியில் டீயில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

    காரைக்குடியில் டீயில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாலு தேவர். இவரது மனைவி ராக்கு (வயது 70). இவர், ரத்த அழுத்த மாத்திரை வாங்குவதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண், ராக்குவுடன் அறிமுகமாகி உங்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வாங்கித்தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி, அங்குள்ள டீ கடைக்கு அழைத்துச் சென்றார். அந்த பெண் வாங்கிக்கொடுத்த டீயை ராக்கு குடித்ததும் சிறிது நேரத்தில் அவர் மயக்கமானார்.

    அந்த சமயத்தில் மர்ம பெண், ராக்கு அணிந்திருந்த ¾ பவுன் தண்டட்டி நகையை திருடிக் கொண்டு சென்று விட்டார். நினைவு திரும்பிய ராக்கு நகை மற்றும் அந்த பெண்ணை காணாதது கண்டு திடுக்கிட்டார்.

    இது குறித்து அவரது மகன் முனியசாமி, காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை திருடிய மர்ம பெண்ணை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×