என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘நீட்’ தேர்வு மக்களின் விருப்பத்திற்கு எதிராக மத்திய அரசு முடிவு எடுக்காது: மத்திய மந்திரி பேட்டி
    X

    ‘நீட்’ தேர்வு மக்களின் விருப்பத்திற்கு எதிராக மத்திய அரசு முடிவு எடுக்காது: மத்திய மந்திரி பேட்டி

    ‘நீட்’ தேர்வு மக்களின் விருப்பத்திற்கு எதிராக மத்திய அரசு முடிவு எடுக்காது என்று மத்திய மனித வள மேம்பாட்டுதுறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    தாம்பரம்:

    மத்திய மனித வள மேம்பாட்டுதுறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    உயர் கல்வித்துறையில் உத்தேசிக்கப்பட்டு உள்ள ‘நீட்’ தேர்வு முறை அமல்படுத்துவதற்கு முன்னதாக அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்யப்படும். மக்களின் விருப்பத்திற்கு எதிராக மத்திய அரசு முடிவு எடுக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×