என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடலூர் போலீஸ் நிலையத்தில் டிராபிக் ராமசாமி புகார் மனு கொடுத்து விட்டு வந்தபோது எடுத்தபடம்.
    X
    வடலூர் போலீஸ் நிலையத்தில் டிராபிக் ராமசாமி புகார் மனு கொடுத்து விட்டு வந்தபோது எடுத்தபடம்.

    விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட கட்சி பேனர்களை அகற்ற வேண்டும்: வடலூர் போலீசில் டிராபிக் ராமசாமி மனு

    விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட கட்சி பேனர்களை அகற்ற வேண்டும் என வடலூர் போலீசில் டிராபிக் ராமசாமி மனு அளித்தார்.
    வடலூர்:

    சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. இவர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் காரில் சென்னை புறப்பட்டார்.

    வரும் வழியில் வடலூர் வந்தார். அங்குள்ள நான்கு முனைரோட்டில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.சார்பில் சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை பார்த்தார். விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று வடலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று டிராபிக் ராமசாமி புகார் செய்தார். வடலூர் போலீசார் அந்த புகாரை ஏற்று பதிவு செய்தனர். பின்னர் டிராபிக் ராமசாமி காரில் சென்னை புறப்பட்டு சென்றார்.
    Next Story
    ×