என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசல் மக்கள் எதிர்த்தால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது: எச். ராஜா
    X

    நெடுவாசல் மக்கள் எதிர்த்தால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது: எச். ராஜா

    கிராம மக்கள் எதிர்த்தால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என எச். ராஜா கூறினார்.

    சிவகங்கை:

    சிவகங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 14 தினங்களாக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது தமிழகத்தில் தி.மு.க. துணையுடன் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்காது.

    கடந்த டிசம்பர் மாதம் இத்திட்டத்திற்காக ரூ. 11 லட்சத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் செலுத்தி உள்ளது. பெட்ரோல் தேவைக்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது. இப்போது இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் அக்கிராம மக்கள் கிடையாது.


    இத்திட்டத்தின் பயன் குறித்து மத்திய அரசு தெளிவாக விளக்கி உள்ளது. நெடுவாசல் கிராம மக்கள் இத்திட்டத்தை உண்மையிலேயே வேண்டாம் என்று விரும்பினால் மத்திய, மாநில அரசுகள் இது குறித்து பேசி கிராம மக்களின் உணர்வை புரிந்து செயல்படும். மக்கள் விரும்பினால் இத்திட்டம் வராது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் சுவாமி நாதன், வக்கீல் சொக்க லிங்கம், நிர்வாகிகள் ஷாம், ராஜேந்திரன், விஸ்வநாத கோபால் சூர்ய நாராயணன் உள்பட பலர் இருந்தனர்.

    Next Story
    ×