என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேஸ்
    X

    சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேஸ்

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் போர்டிகோ பகுதியில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்நாட்டு முனையம் வருகை பகுதி 2-வது நுழைவு வாயில் அருகே கார்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லும் ‘போர்டிகோ’ பகுதியில் நேற்று ஒரு சூட்கேஸ் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது.

    இதனை மத்திய தொழிற்படை போலீசார் மற்றும் விமான நிலைய போலீசார் கண்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த சூட்கேசை யாரும் சொந்தம் கொண்டாட வரவில்லை. இதனால் அந்த மர்ம சூட்கேசின் உள்ளே வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது.

    உடனடியாக இதுபற்றி வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மர்ம சூட்கேஸ் இருந்த பகுதியை சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தினர்.

    பாதுகாப்பு கவசம் அணிந்த வெடிகுண்டு நிபுணர் அந்த மர்ம சூட்கேசை சோதனை செய்த போது, அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அதன் பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர். பின்னர் அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் துணிகள் இருந்தது.

    விமானத்தில் வந்த பயணி யாராவது அந்த சூட்கேசை மறந்து போய் விட்டுச்சென்று இருக்கலாம் என தெரியவந்தது. அந்த சூட்கேஸ் விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×