என் மலர்
செய்திகள்

மானாமதுரை அருகே ரேஷன் கடைக்கு மக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு
மானாமதுரை அருகே ரேஷன் கடைக்கு பொதுமக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடி கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் 150-க்கும் மேற்பட்டோரின் குடும்ப அட்டைகள், திடீரென வறுமைக்கோடு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாம்.
இது குறித்து குடிமைப் பொருள் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது பற்றி விசாரிக்க வருவதாக அதிகாரிகள் கூறினர். இதற்காக ரேஷன் கடை முன்பு மக்கள் திரண்டிருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அதிகாரிகள் வராததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் ரேஷன் கடைக்கு பூட்டு போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






