என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே தவறி வந்த மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு
ஜெயங்கொண்டம் அருகே வழி தவறி வந்த மானை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்த வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பாப்பாக்குடி கிராம வயல்களில் ஒரு புள்ளிமான் சுற்றித்திறிவதாக மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடம் சென்று பார்த்தபோது வழி தவறி வந்த ஒரு புள்ளி மான் செய்வதறியாது திகைத்து நின்றது. அதனை போலீசார் அவ்வூர் பொது மக்களின் உதவியுடன் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அரியலூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் வனக்காப்பாளர்கள் சந்திரசேகரன், சிவக்குமார் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் சென்று மானை பெற்று சென்றனர்.

Next Story