என் மலர்
செய்திகள்

மொடக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
மொடக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளையம், சின்னமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(27). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலை விசயமாக சென்றார்.
ஈரோடு-கரூர் ரோடு வேப்பமரத்துகளம் ரெயில்வே கேட் அருகே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பிரபாகரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பிரபாகரன் தலையில் பலத்த அடிபட்டு உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






