என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர்க்கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்: மார்க். கம்யூ. வலியுறுத்தல்
    X

    போர்க்கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்: மார்க். கம்யூ. வலியுறுத்தல்

    ஈரோடு மாவட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய மார்க். கம்யூ.வலியுறுத்தி உள்ளது.
    ஈரோடு:

    இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளர் சுந்தர ராஜன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட செயலாளர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, ஈரோடு மாவட்டம் முழுவதும் கடுமையான வறட்சியும், விவசாய பாதிப்படைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் வறட்சி மாநிலமாக அறிவித்து பயிர்கள் பாதிப்பை ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் கூலி வழங்கவில்லை.

    அவர்களுக்கு உடனடியாக கூலி வழங்க வேண்டும். குத்தியாலத்தூர், திங்களூர், தாளவாடி, பர்கூர் மலைப்பகுதியில் வன விலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்கவும், மலைப் பகுதியில் தொட்டி கட்டி லாரியின் மூலம் குடிநீர் வசதி செய்ய வேண்டும்.

    ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்பாதிப்படைந்து, தொழிற்சாலை கழிவுநீராக மாறி வரும் நிலை உள்ளது. குடி நீர் தட்டுபாட்டிக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×