என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானியில் கள்ளக்காதலியை கல்லால் தாக்கிய காதலன் கைது
    X

    பவானியில் கள்ளக்காதலியை கல்லால் தாக்கிய காதலன் கைது

    பவானியில் குடும்பம் நடத்த வர மறுத்த கள்ளக்காதலியை கல்லால் தாக்கிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    பவானி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மீனா (வயது 45). இவரது கணவர் சுப்பிரமணி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன் (45). இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரவணனிடம் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1½ வருடங்களாக மீனா தன் மகள் வீட்டில் வசித்து வருகிறார். அடிக்கடி சரவணன் மீனா வீட்டிக்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்றும் சரவணன் மீனா வீட்டுக்கு சென்று அவரை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். ஆனால் மீனா வர மறுத்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் மீனாவை கல்லால் தக்கியதாக கூறப்படுகிறது. மேலும் என்னுடன் வாழ வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாவும் மிரட்டினாராம். இதில் காயம் ஏற்பட்ட அவரை பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து மீனா பவானி போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அங்குராஜ், சார்பு இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    Next Story
    ×