என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவி தற்கொலை: காதல் திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்
    X

    மனைவி தற்கொலை: காதல் திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்

    மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூர் சங்குவார் வீதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). திருப்பூரில் உள்ள கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி பெயர் மகாதேவி (24). கடந்த 18.11.2010 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மனைவியை கணவர் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மனைவி மகாதேவி கோபித்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். தூக்குபோட்டு தற்கொலை செய்ய முயன்ற மனைவியை குமார் காப்பாற்றினார்.

    இதேபோல் சம்பவத்தன்றும் ஏற்பட்ட தகராறில் மகாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

    அப்போது கணவர் குமார் ‘‘முன்பும் இப்படி தான் தற்கொலை செய்ய நாடகம் ஆடினாய். நான் காப்பாற்றினேன். இப்போதும் அப்படிதான் செய்கிறாய். நீ இருந்தால் என்ன... செத்தால் என்ன...? என்று கூறினாராம். ஆனால் மகாதேவி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு மனைவியை துன்புறுத்தியதாக 3 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் கடட தவறினால் 6 மாத ஜெயிலும் தற்கொலைக்கு தூண்டியதாக 10 ஆண்டு ஜெயிலும் ரூ.2 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

    இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சுமதி வாதாடினார்.

    Next Story
    ×