என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே பஸ் மோதி விவசாயி பலி
    X

    கோபி அருகே பஸ் மோதி விவசாயி பலி

    கோபி அருகே பஸ் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி அருகே உள்ள காளி செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது65). விவசாயி.

    இவர் காளிசெட்டிபாளையத்தில் இருந்து கோபிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒத்தக்குதிரை சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் குருசாமி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட குருசாமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவரை சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் பாக்யராஜ் என்பவரை கைது செய் தனர். விபத்தில் பலியான குருசாமிக்கு நல்லம்மாள் (55) என்ற மனைவியும், ஒருமகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    Next Story
    ×