என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: துப்பாக்கி முனையில் ஓட்டு வாங்கியதற்கு சமம் - துரைமுருகன்
    X

    நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: துப்பாக்கி முனையில் ஓட்டு வாங்கியதற்கு சமம் - துரைமுருகன்

    கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிறை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது, ‘துப்பாக்கி முனையில் ஓட்டு வாங்கியதற்கு சமம்’ என்று துரைமுருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
    காஞ்சீபுரம்:

    சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தி.மு.க.வினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    காஞ்சீபுரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் காந்தி சாலை பெரியார் நினைவு தூண் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு தலைவருமான ஜெகத்ரட் சகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.



    உண்ணாவிரத போராட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:-

    அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சிந்தனை செய்ய விடாமல் கூவத்தூர் என்ற தனி காட்டில் அடைத்து வைத்திருந்தனர். அவர்களின் போன்கள் பிடுங்கப்பட்டு வீட்டு தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    அவர்களை வேறு வகையில் கவனம் செலுத்த விடாமல் எல்லாவற்றையும் கவனித்து நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்குப்பெற வைத்துள்ளனர். இது துப்பாக்கி முனையில் ஓட்டு வாங்கியதற்கு சமம்.

    சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அல்லது வாக்கெடுப்பை ஒருவார காலத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றுதான் கூறினோம். ஆனால் இதனை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனை கண்டித்த தி.மு.க. உறுப்பினர்கள் சபை காவலர்களால் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளோம்.

    அடிமையாக்கப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள். நாங்கள் உரிமை கேட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது ஜனநாயக படுகொலை.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×