என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணத்துக்கடவு அருகே தனியார் பஸ் மோதி ரியல் எஸ்டேட் புரோக்கர் பலி
    X

    கிணத்துக்கடவு அருகே தனியார் பஸ் மோதி ரியல் எஸ்டேட் புரோக்கர் பலி

    கிணத்துக்கடவு அருகே தனியார் பஸ் மோதி ரியல் எஸ்டேட் புரோக்கர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிணத்துக்கடவு:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கள்ளாங்காட்டு புதூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 38). ரியல் எஸ்டேட் புரோக்கர்.

    சம்பவத்தன்று இவர் பொள்ளாச்சி -பழனி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    அவரை அந்த பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனியார் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த தகவல் கிடைத்ததும் கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் திருமேணி சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தனியார் பஸ் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×