என் மலர்

  செய்திகள்

  தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.4 லட்சம் பொருட்கள் மோசடி: 3 பேர் கைது
  X

  தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.4 லட்சம் பொருட்கள் மோசடி: 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றி தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.4 லட்சம் பொருட்கள் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  ராயபுரம்:

  சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் உதவி மேலாளராக மதன் (32) என்பவர் பணிபுரிகிறார். வண்ணாரப்பேட்டையை சுற்றியுள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிதி நிறுவனங்களில் வாங்கப்படும் பொருட்களுக்கு இவர் கண்காணிப்பில் கடன் வசதி வழங்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் 3 பேர் தொடர்ந்து வீட்டு உபயோக பொருட்களை மாத தவணை முறையில் கடனுக்கு வாங்கினர். ஆனால் வாங்கிய கடனுக்கான பணத்தை செலுத்தவில்லை.

  இது குறித்து விசாரணை நடத்திய போது போலியான முகவரி மற்றும் போலியான ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது போன்று அவர்கள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள டி.வி., பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியிருந்தனர்.

  வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமி‌ஷனரிடம் புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து உதவி கமி‌ஷனர் ஆனந்தகுமார் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

  அவர்கள் தீவிர விசாரணையை நடத்தி கண்ணதாசன் நகரை சேர்ந்த ராஜேஷ் (32), பட்டாளத்தை சேர்ந்த சதீஷ்குமார் (30), கண்ணகி நகரை சேர்ந்த முத்தமிழழகன் (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள டி.வி.க்கள், பிரிட்ஜ்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  Next Story
  ×