என் மலர்

    செய்திகள்

    உறவினர்கள் தாக்குதலில் கோமா நிலை: 8 மாதத்துக்கு பின் காவலாளி மரணம்
    X

    உறவினர்கள் தாக்குதலில் கோமா நிலை: 8 மாதத்துக்கு பின் காவலாளி மரணம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    செங்குன்றம் அருகே உறவினர்கள் தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற காவலாளி 8 மாதத்துக்கு பின் பரிதாபமாக இறந்தார்.
    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்து சோத்துப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 38). மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள தனியார் நிறுவனத்தின் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் ரகு குமார், சிவா, புவிதரன் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேரும் சேர்ந்து தாக்கியதில் முரளி பலத்த காயம் அடைந்து கோமா நிலைக்கு சென்றார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. அவரை வீட்டில் வைத்து கவனித்து வந்தனர்.

    இது தொடர்பாக அடிதடி வழக்கு பதிவு செய்து ரகுகுமார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை முரளிதரன் பரிதாபமாக இறந்தார். இதையடுதுது போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். ரகு குமார், சிவா, புவிதரன் ஆகியோரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வரு கிறார்கள்.
    Next Story
    ×