என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறிஞ்சிப்பாடியில் அரசு பள்ளி காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது: ஆசிரியர்கள்-மாணவர்கள் அதிர்ச்சி
    X

    குறிஞ்சிப்பாடியில் அரசு பள்ளி காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது: ஆசிரியர்கள்-மாணவர்கள் அதிர்ச்சி

    குறிஞ்சிப்பாடியில் அரசு பள்ளி காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    குறிஞ்சிப்பாடி:

    குறிஞ்சிப்பாடி ரெட்டித்தெருவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடத்தின் அருகே 6 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த சுவர் சேதமடைந்து காணப்பட்டது. அதை சீரமைக்க பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவு திடீரென்று காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. அந்த பகுதி முழுவதும் கற்கள் சிதறிக்கிடந்தன. இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காம்பவுண்டு சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

    காலையில் விழுந்திருந்தால் மாணவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

    Next Story
    ×