என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே மதுபானம் விற்றவர் கைது
    X

    வேதாரண்யம் அருகே மதுபானம் விற்றவர் கைது

    வேதாரண்யம் அருகே மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது33) விவசாயக்கூலி தொழிலாளி. இவர் அப்பகுதியில் பாண்டிச்சேரி மதுபானம் விற்றுக் கொண்டிருப்பதாக வேட்டைக்காரனிருப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை 10 லிட்டர் பாண்டிச்சேரி மதுவுடன் கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இதற்கிடையில் சிவக்குமாரின் மனைவி திலகவதி போலீசார் மாமுல் வாங்கிக்கொண்டு எனது கணவரை மதுபானம் விற்பனை செய்ய அனுமதி கொடுத்துவிட்டு அடிக்கடி வழக்கு போடுகின்றனர் என்று உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

    Next Story
    ×