என் மலர்

  செய்திகள்

  எண்ணூரில் கடலில் மீன்பிடித்தபோது படகு கவிழ்ந்து மீனவர் பலி
  X

  எண்ணூரில் கடலில் மீன்பிடித்தபோது படகு கவிழ்ந்து மீனவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எண்ணூரில் கடலில் மீன்பிடித்தபோது படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  திருவொற்றியூர்:

  எண்ணூர் தாளங்குப்பத்தை சேர்ந்தவர் பாலு (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், ரகு மீனவர்கள். இவர்கள் 3 பேரும் நேற்று மாலை கடலில் மீன் பிடிக்க பைபர் படகில் சென்றனர். பின்னர் மீன்களை பிடித்து விட்டு இன்று அதிகாலையில் கரை திரும்பினர்.

  எண்ணூர் முகத்துவாரம் அருகே வந்த போது கடலில் அலை வேகமாக வீசியது. இந்த கடல் அலைக்கு பைபர் படகு தாக்கு பிடிக்காமல் கடலில் கவிழ்ந்தது. அப்போது 3 பேரும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர்.

  அப்போது கவிழ்ந்த பைப்பர் படகு எதிர்பாராத விதமாத பாலு மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து கடலுக்குள் மூழ்கினார். சந்திரசேகரும், ரகுவும் நீந்தி கரைக்கு வந்தனர்.

  இன்று காலை அந்த பகுதிக்கு சென்றபோது கவிழ்ந்த படகும், பாலுவின் உடலும் கரை ஒதுங்கியது. தகவலறிந்ததும் எண்ணூர் போலீசார் விரைந்து சென்று பாலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இறந்து போன பாலுவுக்கு மளவாணி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
  Next Story
  ×