என் மலர்
செய்திகள்

காதலர்தினத்துக்கு எதிர்ப்பு: நாய்களுக்கு திருமணம்
காதலர் தினம் இன்று உற்சாகமாக காதலர்கள் கொண்டாடி வரும் நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பும் கிளம்பி ஆங்காங்கே போராட்டமும் நடந்து வருகிறது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு காதலர் தினத்தை யொட்டி ஏராளமான காதல் ஜோடிகள் வருவார்கள். காதல்மொழிபேசி மகிழ்வார்கள்.
இந்த காதலர்களுக்கும் காதலர் தினத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியில் சிலர் இன்று கொடிவேரி அணை பிரிவுக்கு வந்தனர். அங்கு 2 நாய்களுக்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர். திருமண நிகழ்ச்சி நடந்தபோது 2 நாய்களுக்கும் மேலே குடைகளை பிடித்தபடி இருந்தனர். மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், நிர்வாகிகள் பாபு, ரங்கசாமி, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமணம் முடித்த பிறகு நாய்களை கழுத்தில் மாலையுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
காதல்ஜோடி ஏதாவது வருகிறதா? என்று நோட்ட மிட்டபடி சென்றனர். காதலர் தினத்தை எதிர்த்து கோஷமிட்டனர்.
ஆனால் உஷாரானசில காதல் ஜோடிகள் அவர்களின் கண்ணிலிருந்து தப்பி வேறுவழியில் சென்று விட்டனர்.

Next Story