என் மலர்

  செய்திகள்

  சேலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி
  X

  சேலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சேலம்:

  சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலையில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் ஆர்.டி.ஓ.அலுவலகம் உள்ளது.

  இந்த அலுவலகத்தின் முன்பகுதியில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி 55 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் நேற்றிரவு 11.30 மணியளவில் நடந்து சென்றார். அப்போது கொண்டலாம்பட்டி பைபாசில் இருந்து சீலநாயக்கன்பட்டி பைபாஸ் நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

  இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி அங்கு கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

  பின்னர் அங்கு உயிருக்கு போராடிய படி கிடந்த அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

  விபத்தில் இறந்த அந்த முதியவர் பெயர் விவரம் தெரியவில்லை, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்தும், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் குறித்தும் போக்குவரத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×