என் மலர்
செய்திகள்

குழந்தை வரம்வேண்டி 23 அடி உயர மரத்துக்கு மாலை அணிவித்து பெண்கள் வழிபாடு
பண்ருட்டி அருகே குழந்தை வரம்வேண்டி 23 அடி உயர மரத்துக்கு மாலை அணிவித்து பெண்கள் வழிபாடு நடத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூர் பெரியபுறங்கனியில் கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது கன்னிமார்களுக்கு விசேஷ பூஜை நடத்தப்பட்டது. பின்னர் கிராமத்தில் உள்ள 23 அடி உயர கழு மரத்துக்கு ராட்சத மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.
கழுமரத்துக்கு மாலை அணிவித்து வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விரைவில் குழந்தைபாக்யம் கிடைக்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது. அதன்படி பெண்கள் மாலை அணிவித்து வழிபட்டனர்.
முன்னதாக அங்குள்ள குளக்கரையில் நீராடுதல் மற்றும் 7 கன்னிமார்கள் ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story