என் மலர்

  செய்திகள்

  முதல்வர் தகுதி ஓ.பன்னீர்செல்வத்திற்குத்தான் உள்ளது: விஜயலட்சுமி பழனிச்சாமி பேட்டி
  X

  முதல்வர் தகுதி ஓ.பன்னீர்செல்வத்திற்குத்தான் உள்ளது: விஜயலட்சுமி பழனிச்சாமி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்வர் தகுதி ஓ.பன்னீர் செல்வத்திற்குத்தான் உள்ளது என்று சேலத்தில் முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி பேட்டியில் கூறியுள்ளார்.

  சேலம்:

  முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி சேலத்தில் பேட்டி அளித்தார்.

  தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று நேரில் சந்தித்து எனது ஆதரவை தெரிவித்தேன்.

  முதல் -அமைச்சர் தகுதி அவருக்குத்தான் உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். 1972-ல் கட்சி தொடங்கிய போது பல்வேறு சோதனைக்கு அவர் ஆளானார். இதுபோல் ஜெயலலிதாவும் பல்வேறு இன்னல்கள், சோதனைகளுக்கு உள்ளானார்.

  அவர் மறைவுக்கு பின்னர் கட்சியை யார் வழிநடத்தி செல்வது என தொண்டர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். கட்சிக்கு பல்வேறு சோதனைகள் வந்த போதெல்லாம் அம்மா தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தைத் தான் முன்மொழிந்தார்.

  மக்கள் மத்தியிலும், அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியிலும் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்குத் தான் ஆதரவு உள்ளது. சசிகலாவை ஏற்றும் கொள்ளும் மனநிலையில் யாரும் இல்லை. மக்களையும், கட்சி தொண்டர்களையும் அரவணைத்து செல்லும் தகுதி முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×