என் மலர்

    செய்திகள்

    கோவை அருகே விபத்து: வாலிபர் பலி
    X

    கோவை அருகே விபத்து: வாலிபர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து சாலை தடுப்பு சுவரில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

    கோவை:

    கோவை உடையாம்பாளையம் அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீராம்(வயது 23). கால்டாக்சி நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு அலுவலக வேலையாக உக்கடம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். சுங்கம் சந்திப்பு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் வேகமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொது மக்கள் ஸ்ரீராமை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார். விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×