என் மலர்

  செய்திகள்

  கூவத்தூர் புறப்பட்டார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா
  X

  கூவத்தூர் புறப்பட்டார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நட்சத்திர தனியார் விடுதியில் அவர்களை சந்திப்பதற்க்காக விகே சசிகலா போயஸ் கார்டனில் இருந்து கூவத்தூர் புறப்பட்டார்.
  சென்னை:

  தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலில் அதிமுகவினரின் ஒவ்வொரு அசைவும் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விகே சசிகலா மற்றும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இடையே யார் ஆட்சியை பிடிப்பது என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. 

  அதிமுக பொதுச் செயலாளர் விகே. சசிகலாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னையை அடுத்த கூவத்தூரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று கூவத்தூர் சென்று தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் விவாதித்த விகே. சசிகலா இன்றும் அவர்களை சந்திக்க கூவத்தூர் புறப்பட்டுள்ளார். 

  கூவத்தூர் புறப்படும் முன்பு போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியதாவது..

  எங்களுக்கு எந்த சலசலப்பும் புதிதல்ல, இப்போது போலவே எம்ஜிஆர் காலத்திலும் சிலர் விலகிப் போனார்கள். அதுபோன்ற சதிகளை எல்லாம் தகர்த்து தான் அம்மா கட்சியை வளர்த்துள்ளார். அது போல தற்போதைய துரோகங்களையும் தாண்டி கட்சியை நாம் வளர்ப்போம்.

  நான் உயிரை விட்டுவிடுவேன் என ஆளுநருக்கு நான் கடிதம் எழுதியதாக போலி கடிதம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. என் பெயரில் எழுதப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான கடிதம் போலியானது. 

  நிச்சயமாக அதிமுக கட்சி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். எதிர்நீச்சல் போட்டுத் தான் கழகத்தை இவ்வாறு உயர்த்தியுள்ளோம். உண்மையான தொண்டர்கள் தான் கழகத்திற்கு அஸ்திவாரங்கள். மிரட்டல் உருட்டல்களை கண்டு நான் அஞ்சப்போவதில்லை. இந்த தடங்களும் துரோகங்களும் நாம் கடந்து வந்த பாதை தான்

  முன்பு அம்மாவை எதிர்த்த கூட்டம் தான் இப்போது எங்களை எதிர்க்கிறது. ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. 

  இவ்வாறு அவர் தெரிவித்தார். 
  Next Story
  ×