என் மலர்

  செய்திகள்

  கைலாஷ் சத்தியார்த்தி வீட்டில் திருட்டுபோன நோபல் சான்றிதழ் மீட்பு: 3 பேர் கைது
  X

  கைலாஷ் சத்தியார்த்தி வீட்டில் திருட்டுபோன நோபல் சான்றிதழ் மீட்பு: 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தியின் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு, நோபல் பரிசு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
  சென்னை:

  இந்தியாவை சேர்ந்த குழந்தைகள் உரிமை ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலா ஆகியோர் இணைந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றனர். சமூக ஆர்வலரான சத்யார்த்தி இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்காக போராடி வருகிறார்.

  கைலாஷ் சத்யார்த்தியின் வீடு டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது. அவர் அமைதிக்கான நோபல் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொலம்பியா சென்றிருந்த நேரத்தில் மர்ம ஆசாமிகள் வீட்டினுள் புகுந்து நகை உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். அவரது நோபல் பரிசு சான்றிதழும் இதில் அடங்கும். இதேபோல் அப்பகுதியில் உள்ள மேலும் 2 வீடுகளில் பொருட்கள் கொள்ளைபோனது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

  இந்நிலையில், இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்கள் திருடிச் சென்ற அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர். எனவே, கைலாஷ் சத்தியார்த்தியின் நோபல் பரிசு சான்றிதழும் மீட்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×