என் மலர்

  செய்திகள்

  மிஸ்டுகால் மூலம் ஆதரித்தவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி
  X

  மிஸ்டுகால் மூலம் ஆதரித்தவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மேற்கொண்ட ‘‘மிஸ்டுகால்’’ திட்டம் மூலம் தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு செல்போனில் வாய்ஸ்மெசேஜ் மூலமாக ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
  முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சசிகலாவுக்கு எதிராக பன்னீர் செல்வம் பேட்டி கொடுத்த அன்று அவரது ஆதரவாளர்கள் போன் நம்பர் ஒன்றை வெளியிட்டனர்.

  ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக தொடர வேண்டும் என்று விரும்புபவர்கள், மிஸ்டுகால் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

  இதனையடுத்து அந்த நம்பரில் பலர் மிஸ்டுகால் கொடுத்து ஆதரவை தெரிவித்தனர். அவர்களுக்கு வாய்ஸ்மெசேஜ் மூலமாக ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து வருகிறார்.

  மிஸ்டுகாலில் ஆதரவு தெரிவித்தவர்களின் செல்போனில் வாய்ஸ்கால் மூலமாக பன்னீர்செல்வம் பேசுகிறார். நான் ஓ.பி.எஸ். பேசுகிறேன். மிஸ்டுகால் மூலம் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. புரட்சி தலைவி அம்மா வழியில் மக்களுக்கு பணியாற்ற ஆதரவு அளித்துள்ளீர்கள். அம்மா வழியில் மக்கள் பணி தொடரும்.

  இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசுகிறார்.
  Next Story
  ×